பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல் டு அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது, பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் டு அரக்கோணம் இடையே மின்சார ரயில்கள் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை சென்டிரல் டு அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி, 11 மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் 8-ம் தேதிகளில் கடம்பத்தூர் டு அரக்கோணம் இடையே பகுதியாக ரத்துச் செய்யப்படுகின்றது. சென்ட்ரல் டு அரக்கோணம் இடையே 9:10 மணிக்கு இயங்கும் மின்சார ரயில் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் 8-ம் தேதிகளில் திருவள்ளூர் டு அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.
சென்டிரல் டு திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயங்கும் மின்சார ரயில் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் 8-ஆம் தேதிகளில் திருவள்ளூர் டு திருத்தணி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. அரக்கோணம் டு சென்டிரல் இடையே காலை 10 மணி, 11.10 மணி, மதியம் 12 மணி, 1.50 மணிக்கும் திருத்தணி டு சென்டிரல் இடையே 10:15 மணி, மதியம் 12 35 மணிக்கும் இயங்கும் மின்சார ரயில்கள் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் 8-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பதில் கடம்பத்தூர் டு சென்டிரல் இடையே 10:25 மணி, 11.35 மணி மதியம் 1.25 மணிக்கும், திருவள்ளூர் டு சென்டிரல் இடையே 11:10 மதியம் 12.35 மணிக்கும், அரக்கோணம் டு சென்டிரல் இடையே மதியம் 1.50 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் மேற்கண்ட தேதிகளில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.