ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கோடை விடுமுறை ஆனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் விமான கட்டணம் 2 முதல் 4 மடங்கு அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறை காரணமாக ஏராளமானோர் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்கள். அதனால் பயணத்தின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக விமான பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால் விமானப் பயணத்தின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது.
தற்போது அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக துபாயில் கோடை விடுமுறை மாதங்கள் என்று கருதப்படும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் துபாயில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
அதனால் பயணத்திற்கான தேவை அதிகரித்திருப்பதால் பயணக்கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரபு நாடுகளிலிருந்து இந்திய நகரங்களுக்கு செல்ல கூடிய விமான கட்டணம் 3,000 ரூபாய் வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. அதனால் அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு செல்ல விமான கட்டணம் 33 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.