Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…..! இந்த வகுப்பு மாணவர்கள் “அனைவரும் ஆல்பாஸ்”…. வெளியான முக்கிய தகவல் ….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து முழுமையாக பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீண்டும் பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டும் ஆல் பாஸ் என அறிவிக்கவும், தேர்வுக்கு வராத மாணவர்களை அழைத்து சிறப்பு தேர்வு எழுத வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |