பாப்உலகில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஷகிரா (45). இவருடைய காதலர் ஜெரார்டுபிக்(35). சென்ற 2010 ஆம் வருடம் நடைபெற்ற கால்பந்து உலககோப்பை போட்டியின் போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இதையடுத்து இவர்களது காதல் தீவிரமடைந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இருப்பினும் இதுவரை அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த தம்பதிக்கு இடையில் நன்றாக சென்று கொண்டிருந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட தொடங்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதன்படி ஷகிராவுடன் ஒன்றாக வீட்டில் வசிக்காமல் பார்சி லோனாவில் தனியாக சென்று பிக் வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் 12 வருடங்களுக்கு பின் ஷகிரா – ஜெரார்டு பிக் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர். அதாவது “நாங்கள் பிரிகிறோம் என்பதை உறுதிபடுத்துகிறோம். எங்களது குழந்தைகளின் நல்வாழ்வுக்காக நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.