பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் ரூபாய் 1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDT அறிவித்திருந்தது. ஆனால் அதன் பிறகும் பலர் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காமல் இருந்ததால், காலக்கெடு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 31 2023 வரை ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது பான்-ஆதார் இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் CBDT அறிக்கை வெளியிட்டது.
ஜூன் 30, 2022க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின் படி நீங்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஜூலை 1 ம் தேதிக்கு மேற்பட்டு, அபராதத் தொகை ரூ. 1000 ஆக அதிகரிப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார்-பான் கார்டு இணைப்பதற்கு ரூ. 500 அபராதமாக செலுத்தி வேண்டும். இந்த மாத இறுதிக்குள் இணைக்கவில்லை என்றால் ஆதார் இணைக்காத பான் எண்களுக்கான அபராதத் தொகையான ரூ.1000 செலுத்த வேண்டும்.
இந்த மாத அபராதம் செலுத்த ITNS 280 (மேஜர் ஹெட் ௦௦21) என்ற செலான் எண்ணைப் பயன்படுத்தி செலுத்தலாம். அடுத்த மாதம் அபராதம் செலுத்த, ITNS 280 (மைனர் ஹெட்) என்ற செலான் எண்ணைப் பயன்படுத்த வேண்டும். வங்கிக்கணக்கு திறக்க, பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது, ரொக்கப் பரிவர்த்தனைகள், வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயம் தேவை. வருமான வரித்துறை சட்டம் 272B பிரிவின் படி, பான் எண்ணை வழங்க வேண்டிய ஒவ்வொரு முறையும் செயலிழந்த பான் எண்ணை வழங்க முடியவில்லை என்னும் போது நீங்கள் ரூ.10,000 அபராதமாக செலுத்த வேண்டும்