கிணத்துக்கடவுக்குள் செல்லும் சர்வீஸ் சாலையில் வழிகாட்டி பலகை வைக்காததால் 3 கிலோமீட்டர் சுற்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
கோவை டு பொள்ளாச்சி ரோடு நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதில் நிறைய வண்டிகள் சென்று வருகிறது. இது பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு வரும் பாதையில் தாமரைக்குளம், கோவில்பாளையம், கோதவாடி பிரிவு சொலவம்பாளையம் பிரிவு உள்ளிட்ட ஊர்கள் இருக்கின்றன. இந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நான்கு வழி சாலையிலிருந்து சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. இதனால் கோவை பொள்ளாச்சியிலிருந்து வரும் பேருந்துகள் அந்தந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளை சர்வீஸ் ரோட்டில் ஏற்றி இறக்கி செல்கிறது.
பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு ஊருக்கு வரும் பாதையில் கோதவாடி பிரிவு பகுதியில் கோயம்புத்தூருக்கு நேராகவும் கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் செல்லுகின்ற வகையில் வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டது. ஆனால் கிணத்துக்கடவுக்கு செல்லும் சர்வீஸ் சாலை அருகில் வழிகாட்டி பலகை வைக்காமல் 50 கிலோமீட்டர் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் வெளியூர்களிலிருந்து வரும் வாகன ஓட்டுனர்கள் கிணத்துக்கடவுக்கு செல்ல பாதை தெரியாமல் நேராக மேம்பாலத்தில் ஏறி 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மீண்டும் கிணத்துக்கடவுக்கு திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் பாலத்திலிருந்து இறங்கியதும் மீண்டும் மேம்பாலம் ஏறி எதிர்திசையில் வருகிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே பொள்ளாச்சியிலிருந்து வரும் நான்கு வழி சாலையில் கிணத்துக்கடவு பிரியும் சாலையில் முன்னதாகவே வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். இதனால் வெளியூரை சேர்ந்த வாகன ஓட்டிகள் குழப்பமில்லாமல் கிணத்துக்கடவுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும். இது குறித்து வாகன ஓட்டிகள் பேசியதாவது, கோவை டு பொள்ளாச்சி நான்கு வழி சாலையிலிருந்து எந்த ஊருக்கு சர்வீஸ் சாலை பிரியும் இடத்தில் முன்னதாக வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்.
இதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் இல்லாமல் செல்ல முடியும். ஆனால் நான்கு வழிச்சாலையை கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு பிரியும் இடத்தில் வழிகாட்டி பலகை வைக்காததால் கிணத்துக்கடவு மேம்பாலத்தில் ஏறி இறங்கி 3 கிலோமீட்டர் சுற்றி மீண்டும் கிணத்துக்கடவுக்கும் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சர்வீஸ் ரோட்டு பிரிந்து செல்லும் பகுதியில் ஆய்வு செய்து வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.