இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில் பயணத்தையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர். மற்ற பயணங்களை ஒப்பிடுகையில் ரயில் பயணம் சௌகரியம் ஆகும் செலவு குறைந்ததாகவும் இருக்கின்றது. அதனால் ரயிலை பயணிகள் தேர்வு செய்கின்றனர். ரயில்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் சில பிரச்சனைகளும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கழிவறை சுத்தமாக இருப்பது போன்ற பல பிரச்சனைகள் உள்ளது. இந்த பிரச்சினையை யாரிடம் சொல்லி புகார் அளிக்க வேண்டும் என்ற பயணிகள் பலருக்கும் தெரியாது.
எல்லாவற்றையும் டிடிஆரிடம் கூறினால் உடனடி தீர்வு கிடைக்காது. எனவே ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் பயணம் செய்யும் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அந்த பிரச்சனைக்கு எப்படி உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பலருக்கும் இன்று வரை தெரிவதில்லை. இதற்காக ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அதாவது Rail MADAD என்ற மொபைல் பயன்பாட்டில் இருக்கின்றது. இது பலருக்கும் தெரியாது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் சரி இதனை டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த செயலி மூலமாக ரயிலில் பயணிக்கும் போது பொது மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை அவர்கள் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு உதாரணமாக ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது நோயாளிகள் யாருக்காவது திடீரென அவசர மருத்துவ உதவி தேவைபட்டால் இந்த செயலி மூலமாக நேரடியாக அல்லது போன் மூலமாகவும் நீங்கள் உதவி பெறலாம். அதுமட்டுமல்லாமல் திருட்டு மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்தாலும் இந்த செயலி மூலமாக நீங்கள் புகார் கொடுக்க முடியும்.
ரயில் பயணத்தின் போது சில பயணிகளால் நமக்கு தொந்தரவு இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பயணத்தின்போது பாதுகாப்பற்ற சூழல் உருவானால் உடனடியாக இந்த செயலி மூலமாக புகார் அளித்து போலீசாரின் உதவியை பெற முடியும். அதுமட்டுமல்லாமல் ரயிலில் தொலைந்து போன பொருள்கள், கழிப்பறை சுத்தமாக இல்லாதது, தண்ணீர் வரவில்லை உள்ளிட்ட புகார்களையும் இந்த செயலி மூலமாக பயணிகள் கொடுக்க முடியும். இதில் நீங்கள் புகார் அளித்தவுடன் அந்த புகாரின் தன்மையை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரி அதற்கு உரிய ரயில்வே அதிகாரிகள் அல்லது ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு புகார் கூறுவார்.
அந்தப் புகார்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்கு தீர்வு காண ஒவ்வொரு கூட்டத்திலும் பிரத்தியேகமாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணித்தாலும் முன்பதிவு இல்லாத பெட்டிக்கே டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவு உள்ள பெட்டிக்கு வந்து அங்குள்ள நபர்களுக்கு தொந்தரவு அளிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினை தொடர்பாகவும் இந்த செயலியில் புகார் அளிக்கலாம்.
வேறு யாராவது ஒரு நபர் உங்களது சீட்டை ஆக்கிரமித்து வைத்து இருந்தால் உடனடியாக இதில் நீங்கள் புகார் செய்யலாம். அதன் பிறகு உடனே டிக்கெட் பரிசோதகர் மற்றும் அந்த ரயிலில் உள்ள போலீசார் வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். ரயிலில் பயணம் செய்யும்போது பயணிகளுக்கு பெரிதும் உதவக் கூடிய இந்த செயலி குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. மக்கள் பலரும் இதனை சரியாக பயன்படுத்துவது இல்லை. ஒரு சில புகார்கள் மட்டுமே இதில் வருகின்றன.
இந்த மொபைல் செயலி இல்லாதவர்கள் தங்கள் செல்போனில் 139 என்ற ரயில்வே உதவி எண்ணிற்கு போன் செய்து உங்களது புகார் தெரிவிக்கலாம். இதற்கு உங்களிடம் ஸ்மார்ட்போன் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. எந்த போனில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் புகார் அளிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த சேவை பயணிகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த செயலி மத்திய அரசின் உமாங் செயலி உடனும் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவும் இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.