இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பலரும் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்ய தொடங்கிவிட்டனர். அதனைப்போலவே புதிதாக வாகனம் வாங்க நினைப்பவர்கள் கூட எலக்ட்ரிக் வாகனங்களை அதிகம் வாங்குகின்றனர். தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை பெரிதும் உயர்ந்துள்ளது.
அதற்கு ஏற்றது போல வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் புதிய மாடல்களில் எலக்ட்ரிக் வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அவற்றின் விலை குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் அதில் நிறைய சிறப்பம்சங்களும் உள்ளன. இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்கிறது. அதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை பட்டியலை இதில் விரிவாக பார்க்கலாம்.
Bounce Infinity E1 – ரூ.45,099 முதல் ரூ68,999
Hero Electric Flash – ரூ.59,640
Hero Electric Optima – ரூ.62,190 முதல் ரூ.77,490
Hero Electric Atria – ரூ.71,690
Hero Electric NYX ரூ.77,540
Hero Electric Photon – ரூ.80,790
Ola S1 – ரூ.85,099 முதல் ரூ.1.20 லட்சம்
BGauss D15 – ரூ.99,999 முதல் ரூ.1.15 லட்சம்
Oben Rorr – ரூ.1.03 லட்சம்
Simple One – ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம்
Ather 450X – ரூ.1.19 லட்சம் முதல் ரூ.1.38 லட்சம்
Revolt RV400 – ரூ.1.25 லட்சம்
Bajaj Chetak – ரூ.1.48 லட்சம்
TVS iQube Electric – ரூ.1.61 லட்சம் – ரூ.1.66 லட்சம்