Categories
மாநில செய்திகள்

முருகனுக்கு பரோல் ரத்து…. வாபஸ் பெற்ற நளினி…. நீதிமன்றத்தின் தீர்ப்பு….!!!

முருகனுக்கு பரோல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் தமிழக அரசிடம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு தனக்கு பரோல் வழங்கியதால் நான் என்னுடைய தாய் பத்மா உடன் இருக்கிறேன். ஆனால் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் என்னுடைய கணவர் முருகனுக்கு பரோல் வழங்கவில்லை.

இதனையடுத்து 31 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் எங்களை விடுவிப்பதற்கு தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. என்னுடைய கணவர் முருகனை மருத்துவ காரணங்களுக்காக 6 நாட்கள் பரோலில் விடுவிக்கும்படி நானும் என்னுடைய தாயாரும் சிறைத்துறையினரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை பரிசீலனை செய்யப்பட வில்லை என குறிப்பிட்டிருந்தார்.

எனவே தமிழக அரசு தன்னுடைய கணவரை 6 நாட்கள் மட்டும் பரோலில் விட அனுமதிக்குமாறு மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறையில் இருந்த போது முருகன் சிறையின் விதிமுறைகளை மீறியதாகவும், தடை செய்யப்பட்ட பொருளை வைத்திருந்ததாகவும் 2 குற்றங்கள் இருக்கிறது. இதில் ஒரு குற்றத்திலிருந்து மட்டும் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது மற்றொரு வழக்கு நிலுவையில் தான் இருக்கிறது.

இதனால் முருகனுக்கு பரோல் வழங்க முடியாது எனவும், இதை எதிர்த்து சிறைத்துறை டி.ஐ.ஜியிடம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் நீதிபதி கூறியிருந்தார். இதுகுறித்து கடந்த மாதம் 28-ம் தேதி சிறைத்துறை தரப்பில் ஆஜரான அரசு நீதிபதி ஹசன் முகமது ஜின்னா கூறினார். இந்நிலையில் நீதிபதிகள் மேல்முறையீடு செய்யுமாறு கூறியிருந்த நிலையில், நளினி தன்னுடைய மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறினார். இதனால் நளினி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

Categories

Tech |