வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய அப்டேட் வர உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது நாம் தவறுதலாக டெலிட் செய்த மெசேஜை மீட்டு எடுப்பதற்கு வசதியாக UNDO என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட உள்ளது. இதற்கு முன் எனக்கு மட்டும் டெலிட் செய்யவும், அனைவருக்கும் டெலிட் செய்யவும் என்ற ஆப்ஷன்கள் உள்ள நிலையில் தற்போது டெலிட் செய்யப்பட்ட மெசேஜை மீண்டும் பார்க்க கொண்டு வரும் UNDO ஆப்சன் பயனாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றது.
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய விஷயங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அன்மையில் வாட்ஸ் அப் தளத்தில் பிரத்தியேகமாக எடிட்டர் எதுவும் இல்லாத நிலையில் எடிட் ஆப்ஷனை அறிமுகம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.