நடுரோட்டில் கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரின் எஞ்சின் வெடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் காரை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார்.
ஆனால் வரமுடியவில்லை . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்து கணேசனை மீட்டு சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.