உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கொரோன வைரஸ் தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது.
இருமல் மற்றும் சளியை சிந்திய பிறகு சோப் அல்லது திரவ கிருமிநாசினி கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும்.
சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய் மூக்கை மூடிக் கொள்வதோடு , அந்தத் துணியை உடனடியாக மூடிய குப்பைத் தொட்டியில் போட வேண்டும். கால்களையும் கழுவ வேண்டும்.
இதே போல காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்களிடம் மிக நெருக்கமாக பழகுவதை தவிர்க்க வேண்டும்.
பொது இடங்களில் கண்டிப்பாக எச்சில் துப்பக்கூடாது.
காய்ச்சலுடன் இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை உடனே அணுகுவதோடு , எந்தெந்த பகுதிக்கு சென்று வந்தீர்கள் என்பதையும் அவரிடம் தெரிவிக்க வேண்டும்.
கால்நடை சந்தைக்குச் சென்றால் அங்கு உள்ள விலங்கினங்களை நேரடியாக தொடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
வேகவைக்காத அல்லது முழுமையாக வேகாத இறைச்சியை சாப்பிடக்கூடாது.
பால் மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்களை கையாளும் போது உணவு பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
உணவு தயாரிக்கும் முன்பும் சாப்பிடும் முன்பும் கைகள் அழுக்காக காணப்பட்டாலும் கைகளை கழுவ வேண்டும்.
கழிவறை சென்று வந்தால் சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம்.