டெல்லியில் பைக்கில் சென்றவரை காரில் வந்த நபர் இழுத்துச் செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பைக்கில் பின்னால் சென்றவரை காரில் சென்ற நபர் மோதி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் கார் மோதியதில் பைக் சரிகின்றது. அதில் பயணித்த நபரும் கீழே விழுந்துள்ளார். இதனை அவருக்கு பின்னால் வந்த நண்பர் வீடியோவாக பதிவு செய்திருக்கின்றார். இதுபற்றி பாதிக்கப்பட்ட நபரான ரேயான் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னுடைய நண்பர்கள் 10 பேருடன் குருகிராமில் இருந்து டெல்லி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது பைக்கில் சென்ற எங்களை நெருக்கியபடி சாலையில் காரில் வந்த நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். எனது நண்பரை மிரட்டியது மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் எனது நண்பர் பைக்கை சற்று மெதுவாக ஓட்டியுள்ளார். ஆனால், நான் அவர்களை கடந்து முன்னால் சென்று விட்டேன். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கின்றது.
அதன் பின் காரில் வந்த நபர் விரைவாக ஓடி வந்து எனது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார் என தெரிவித்துள்ளார். இதுபற்றி போலீசார் பேசும்போது பைக்கில் சென்றவர்களிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அழிக்கும் படி நாங்கள் கேட்டிருக்கின்றோம். மேலும் அந்த காரில் வந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதேபோல் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.