Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யயோ அப்படி சொல்லவே இல்லையே…! 200 ரூபாய் கொடுன்னு கேட்குறாங்க… திமுக மீது சசி பாய்ச்சல் …!!

அண்ணாமலை திமுகவின் 2 அமைச்சர்கள் மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சசிகலா, ஊழலுக்கு உண்டான தகவல்களை கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது தான் தெரியும். நாம முன்கூட்டியே ஏதும் சொல்ல முடியாது. இந்த ஓர் ஆண்டில் ஊழலே நடக்கவில்லை என சொல்லுறீங்களா என்ற கேள்விக்கு… அய்யயோ அப்படி சொல்லவே இல்லையே நான்…

ரொம்ப நடக்குது,  ரொம்ப அதிகமா இருக்குது. நான் வெளியூருக்குப் போகும்போது அங்கு உள்ள கோயில்கள் வாசல்ல… சும்மா கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் இது மாதிரி போட்டு வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் வீட்டு பின்புறங்களில் பயிரிட்டு, பறித்து வந்து லேடிஸ் வியாபாரம் பண்றாங்க. அங்க போயி தினமும் எனக்கு  200 ரூபாய்  கொடு அப்படின்னு கேக்குறாங்க. இது ஏன் தெரியல உங்களுக்கு இது மாதிரி ஒரு இடத்தில் இல்லை,  தமிழ்நாடு பூரா நடக்குது.

இதையெல்லாம் நான் ஏன் சொல்ற அப்படின்னா…. இதெல்லாம் சரிப்படுத்தனும் அப்படிங்கிற தான் என்னுடைய எண்ணம்.எட்டாண்டு கால பிஜேபி ஆட்சியை எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு என்னை பொருத்த வரைக்கும் 24 தான் அவர்களுடைய தேர்தல். அப்பதான் என்ன என்கிற தெரியும் ? இப்போ நாம இருக்கிறது தமிழ்நாடு.  தமிழ்நாட்டில் உள்ள ஓட்டு போட்ட மக்களுக்கு நீங்க என்ன செய்றீங்க என்பதுதான் நாம் முன்னுரிமை கொடுத்து பார்க்க முடியும். அது செய்யாததை நான் எடுத்துச் சொல்லுவேன் என தெரிவித்தார்.

Categories

Tech |