Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டசபை சீட்டில் கோளாறு…! தமிழ் பண்பாடுனு பேசிட்டு…. திமுக இப்படி நடந்துக்கலாமா ? – சசிகலா விமர்சனம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நீட் அடுத்த ஆண்டு வர போகுது. திமுக எப்போதுமே சொல்றது செய்வதில்லை. ஆனால் துணிந்து சொல்லிடுவாங்க, அதற்கு திமுக தான் பதில் சொல்லணும். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அதிகாரம் பண்றாங்க. அந்தப் பகுதி மினிஸ்டருக்கு தெரியவேண்டும். அவர் முதல்வருக்கு சொல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு போடணும்.

நாங்க வந்து எடுத்துச் சொல்லலாம். இந்த மாதிரி நடக்குது, அதை சரி பண்ணுங்கன்னு சொல்லலாம். அதை செய்ய வேண்டிய இடத்தில் அவுங்க தான  இருக்காங்க. நாங்கள் ஆட்சிக்கு வரும் காலத்தில் இந்த மாதிரி நடக்காது என  உறுதியாகச் சொல்வேன்.அம்மா ஆட்சி காலத்தில் பெண்களுக்கு சம உரிமை சம வாய்ப்பு வேண்டும் என்று உள்ளாட்சியில் கொண்டு வந்தார்கள். ஆனால் தற்போது இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு….

அங்கு மட்டுமல்ல.. சட்டசபையில் அல்ஃபாபெடிகல் ஆர்டர் இல்ல தான் எல்லாரும் சீட்டில்  உக்காருவாங்க. ஆனா இந்த முறை அதை எடுத்துட்டாங்க. அதை ஏன் எடுத்தாங்கனு உங்கள் எல்லாருக்கும் தெரியும். அவங்களுக்கு வேண்டியவர்களை சி.எம்க்கு பக்கத்துல உட்கார வைக்க தான் செஞ்சு இருக்காங்க.

நீங்க ஏதோ செஞ்சுக்கோங்க. ஆனா நான்  ஒண்ணே ஒன்னு சொல்லுறேன். சட்டசபையில் சீட்டின் இடைவெளி வந்து ரொம்ப குறைவா இருக்கு. அதனால எல்லா கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் எல்லாம்….  அம்மா இருந்த போது அதை செய்தாங்க. ஒரு சைடு பாதி இடத்த கொடுத்தா….  அவங்க எதுவும் வெளியே போவதற்கு யார் மேலயும்….  ஜென்ட்ஸ் மேல…

ஆண்கள் மேல படாம அவங்க சென்று வர முடியும். அதை செஞ்சா  நல்லா இருக்கும். ஏன்னா நம்மளுடைய தமிழ் பண்பாடு,  அதையெல்லாம் மேடையில் முழங்கி  பேசுறாங்க. இதையும் அவங்க செய்யணும்னு நினைக்கிறேன். நான் இந்த கட்சின்னு சொல்ல,  எல்லா கட்சி எம்எல்ஏக்கள் பெண்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக பேசுறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |