Categories
உலக செய்திகள்

பிரபல நாடுகளில்…. செமிகண்டக்டர் சிப் தயாரிப்பதில்…..தைவான் நிறுவனம் திட்டவட்டம்….!!!!

உலக நானோ சிப் சந்தையில் 84 விழுக்காட்டை தைவான் நாடும் மற்றும் 7.6 விழுக்காட்டை சீனா நாடும் கொண்டுள்ளன. மேலும் வாகனங்கள், செல்பேசிகள், மின்னணு கருவிகள் மற்றும் கணினிகள் என அனைத்துக்கும் செமிகண்டக்டர் சிப்  தேவைப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டை ரஷ்யா முற்றுகையிட்டது போல், தைவான் நாட்டையும், சீனா முற்றுகையிட்டால், இந்த செமிகண்டக்டர் வழங்கல் தடைபட்டு, உலக பொருளாதாரமானது பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

இதையடுத்து இத்தகைய காரணங்களால், ஜப்பான் நாட்டில் 860 கோடி டாலர் மதிப்பீட்டிலும் மற்றும் அமெரிக்காவில் 1200 கோடி டாலர் மதிப்பீட்டிலும்  செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலைகளை அமைக்கவும்,  டிஎஸ்எம்சி திட்டமிட்டுள்ளது. மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் சீனா நாடும் சிப் தயாரிப்பில், முதலிடத்தை பிடிக்கும் வகையில், 10,000-கோடி டாலர் மானியமானது வழங்க திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |