டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் நேற்று ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே அங்கே வந்த மர்மநபர் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், கணிசமான அளவில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்த இடத்தில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
The Police Commissioner of Delhi gets an extension on the day there is a shooting in the presence of a substantial police force
Incomprehensible and reprehensible.
One has got an extension, but who has been suspended for the deplorable shooting yesterday?
— P. Chidambaram (@PChidambaram_IN) January 31, 2020