நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அருவியில் பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறையை கழிக்க திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.