நாட்டில் பெரும்பாலானோர் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அவ்வாறு ரயிலில் பயணம் செய்வோர் ஐஆர்சிடிசி செயலி மூலம் முன்பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் ஐஆர்சிடிசி செயலி மூலமாக ஆன்லைனில் பயனர்கள் முன்பதிவு செய்யும் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலமாக பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான வரம்பை நீட்டித்து இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது ஆதார் எண்ணை இணைக்கும் பயனர் கணக்கை பயன்படுத்தி இணைய தளம் மற்றும் செயலி மூலமாக ஒரு மாதத்தில் பயணிகள் அதிக பட்சமாக 6 பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். ஆதார் எண் இணைக்கப்பட்ட பயனர் அடையாளத்தை பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு 12 பயணச்சீட்டுகள் வரை இனி முன்பதிவு செய்துகொள்ள முடியும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வரம்பை இந்திய ரயில்வே தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி ஆதார் எண்ணை இணைக்காத கணக்கு மூலமாக ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் வரையும்,ஆதார் எண் இணைத்த கணக்கு மூலம் 24 டிக்கெட்கள் வரையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் பயணத்தின்போது முன்பதிவு செய்யப்பட்ட அவர்களில் ஒருவரது ஆதார் அட்டை பரிசோதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.