இடைநின்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
6 முதல் 18 வயதுவரை உள்ள பள்ளி செல்லா அல்லது இடைநின்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கவேண்டும். வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து கண்டறிய வேண்டும். பள்ளிகளில் சேர்த்த பின் 3 மாத கால பயிற்சி வழங்கி இயலாமையைப் பொருத்து பள்ளிக்கல்வி அல்லது வீட்டு வழிக் கல்வியை தொடர ஏற்பாடு செய்யவேண்டும். அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்யவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.