Categories
மாநில செய்திகள்

சுயதொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன்…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த கடல் திட்டங்களுக்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக உள்ளவர்கள் கடன் உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது அவசியம். 18 முதல் 60 வயதுடையோர் ஆக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இந்த கடனுதவி வழங்கப்படும். இதில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது (ஆண்டு வட்டி விகிதம் 6 சதவிகிதத்திலிருந்து 8% வரை). பெண்களுக்கான புதிய பொருட்களை கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

இதற்கு 5% மட்டுமே வட்டி. சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவி குழு உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படும். மேலும் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரையும், குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை 15 லட்சம் ரூபாய் வரையும் வழங்கப்படும். மேலும் ஒரு பயனாளிக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு கறவை மாடுகள் வாங்க 60 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் இந்த கடன் பெற விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பிறகு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் அதனை ஒப்படைக்க வேண்டும். இதில் தகுதியுடைய மக்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |