பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான்கானை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் அங்கு பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இம்ரான்கானை காயப்படுத்தினால் தற்கொலை தாக்குதல் நடத்துவேன் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா தற்போதைய பிரதமர் ஷெபாஸ் அரசுக்கு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு விசுவாசமான தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா டுவிட்டரில் கூறியிருப்பதாவது “இம்ரான்கானின் தலையில் ஒரு முடி பாதிக்கப்பட்டால் கூட நீங்களும் உங்களது குழந்தைகளும் இருக்க மாட்டீர்கள் என்று நாட்டை வழிநடத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
முதலாவதாக நான் தான் உங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவேன். அதேபோன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்த தயாராக இருக்கின்றனர்” என்பதை வீடியோவாக பதிவிட்டு டுவிட்டரில் வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக இஸ்லாமாபாத் காவல்துறையினர் கூறியாதவது “அந்நாட்டின் தலைநகா் இஸ்லாமாத்தில் முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையில் இம்ரான்கான் பானிகாலா பகுதிக்கு வருவார் என்று கூறப்படுவதை அடுத்து அப்பகுதியில் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். முன்பாக இம்ரான்கானுக்கு எதுவும் நடந்தால் அதற்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுக்கப்படும். அவா் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். ஆகையால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அவாின் உறவினரும், கட்சியை சோ்ந்தவருமான ஹசன் நியாசி என்பவா் தொிவித்திருந்தாா் என்பது கவனிக்கத்தக்கது.