கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு சென்ற சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பானது வேகமேடுத்து இருக்கிறது. ஒருநாள் பாதிப்பில் பெங்களூரில் தான் அதிக நபர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது. இதனால் இங்கு கொரோனாவை தடுப்பதற்கு பொதுயிடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சியின் சிறப்பு கமிஷனரான ஹரீஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “பெங்களூரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக வணிக வளாகங்கள் உட்பட பொதுயிடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுயிடங்களில் மாஸ்க் அணிவது பற்றி மார்ஷல்கள் வாயிலாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இப்போது பெங்களூரில் தினசரி 16 ஆயிரம் சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். அதனை 20 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைய வேண்டாம்” என்று அவர் கூறினார்.