கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள “விக்ரம்” திரைப்படம் பற்றி புதிய தகவல்களும், வசூல் நிலவரங்களும் வந்தபடி இருக்கிறது. நாளுக்கு நாள் இப்படத்திற்கு வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மேலும் மலையாளத்தில் இந்த திரைப்படத்திற்கு பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது.
அண்மையில் இந்த படத்தை ரஜினிகாந்த் ரசித்துப் பார்த்திருக்கிறார். இதையடுத்து ரஜினி படம் அருமையாக இருக்கிறது என படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார். இவ்வெற்றியின் மூலம் இயக்குனரான லோகேஷ் கனகராஜின் மார்க்கெட்டானது அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம் வரக்கூடிய இவர் அடுத்து இயக்க இருக்கும் விஜய் திரைப்படத்திற்கு சம்பளமாக ரூபாய் 13 கோடி பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.