ஓமலூர் அருகே தாரமங்கலம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தலைமையாசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செங்குந்தர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மேட்டூர் அருகே உள்ள நால்ரோடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து பல மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியில் கூறினால் இன்டர்னல் மார்க் குறைத்து விடுவதாகவும் மாணவிகளை மிரட்டி பேசியுள்ளார்.
இதில் ஒரு மாணவி மட்டும் தைரியமாக தனது பெற்றோரிடம் தகவல் கொடுக்க, அவர் பள்ளியை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த ஓமலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா, அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் மாவட்ட பாதுகாப்பு நலத்துறை அலுவலர்கள் ஆகியோர் மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்து போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.