Categories
மாநில செய்திகள்

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் சேவை தாமதம்…. இதுதான் காரணமா?…!!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருமால்பூர் பகுதிகளுக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் சரியாக இயங்கவில்லை. இதனால் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில்கள் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனை போல கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலும் தாமதமானது. அதனால் பயணிகள் ரயிலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் சிக்னல் இயங்காததால் தாம்பரம் வழித்தட மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டாலும் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து இயக்கப்பட்டது.

Categories

Tech |