தமிழ் சினிமாவின் மூலம் திரைத்துறையில் பாடகராக அறிமுகமானவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் எனும் கேகே. கடந்த வாரம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஆனால் அவரது தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததால் அவரது மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சிபிஆர் சிகிச்சையை உடனடியாக வழங்கியிருந்தால் அவரை காப்பாற்றி இருக்க முடியும் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேகேவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில், கேகே.வின் இதயத்திற்குச் செல்லும் கரோனரி தமனியில் 80 சதவீதம் அடைப்பு இருந்ததாகவும், நிகழ்ச்சியின் போது அவர் அதிக உற்சாகம் அடைந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.