Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் மேலவீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தம்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வெளியே சென்ற ஜீவானந்தம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் ஜீவானந்தத்தின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இருக்கும் விடுதிக்குப் பின்புறம் உள்ள அறையில் ஜீவானந்தம் சடலமாக தொங்கியதை பார்த்த மாணவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜீவானந்தத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜீவானந்தம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |