புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார் .பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இருப்பதாக தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கருணாநிதி வகுத்து தந்த பாதையில் மு க ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம். திமுக அரசின் ஓராண்டு கால ஆட்சிக்கும், பாஜகவின் எட்டாண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல உள்ளது. அதாவது திமுகவின் ஒரு ஆண்டு ஆட்சியை மலை என்று கூறினால், பாஜகவின் எட்டு ஆண்டுகள் கால ஆட்சியை மடு என்று தான் கூற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.