Categories
தேசிய செய்திகள்

10ம், 12 ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…. ஜூன் 20ஆம் தேதி முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது.

மத்தியபிரதேச இடைநிலை கல்வி வாரியம் 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வு அட்டவணையை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. அந்த வகையில் உயர்நிலைப்பள்ளி அல்லது பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 21 ம் தேதி தொடங்க உள்ளது. அதை வேலையில்  மேல்நிலைப்பள்ளி அதாவது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இது குறித்து அட்டவணைப்படி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு மே 20ஆம் தேதியன்று பாடத்திட்டங்களும் ஒரே நாளில் தேர்வுகளும் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் பத்தாம் வகுப்புக்கான துணைத்தேர்வு ஜூன் 26ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தொழிற்கல்வி படிப்புகள் துணைத்தேர்வு ஜூன் 21 முதல் ஜூன் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே மத்திய பிரதேச கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பத்தாம் வகுப்பில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதமும் 59.54 ஆகவும்  பனிரெண்டாம் வகுப்பில் 72.72 சதவீதமாகவும் உள்ளது. இது தவிர இந்த வருட பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் திட்டத்தை அரசு திருத்தியது. அந்த வகையில் திருத்தப்பட்ட மதிப்பெண் திட்டத்தின்படி உயர்நிலை மற்றும் மேல்நிலை தேர்வுகளை 80 மதிப்பெண் தியரி பாடங்களும்  மீதமுள்ள 20 மதிப்பெண்கள் நடைமுறை மற்றும் திட்ட பணிகளுக்கும்  ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நடைமுறை கூறுகளைக் கொண்ட பாடங்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு கோட்பாடு கூறு மதிப்பெண்களுக்கும் 70 மதிப்பெண்களுக்கும்,  நடைமுறைகளுக்கு 30 மதிப்பெண்களுக்கும்  ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |