Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! உடனே இதை செஞ்சி முடிச்சிருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை யிலும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி 11-வது தவணை விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது.

அதன்படி 21,000 கோடி ரூபாய் நிதி உதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு அனுப்பியுள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டத்தில் இ-கேஒய் சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி e-KYC விவரங்களை அப்டேட் செய்யாதவர்கள் pmkissan.gov.in இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவு செய்து ஜூலை 1க்குள் அப்டேட் செய்ய வேண்டும்.

Categories

Tech |