பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகள் ஊராட்சி கரையிருப்பு இல் திருமருகல்- மருங்கூர் இடையேயான வடக்குபுத்தாற்றில் நெடுஞ்சாலை துறை மூலமாக பாலம் கட்டும் பணியானது சென்ற மாதம் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. சென்ற மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாலம் கட்டும் பணி காரணமாக கரையிலிருந்து வடக்குபுத்தாற்றுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை.
இதனால் சீயாத்தமங்கை, வாளாமங்கலம், புறாக்கிராமம், திட்டச்சேரி, ஆலங்குடிசேரி ஆகிய பகுதிகளில் இதன் மூலம் பயன் பெற்று வந்த ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் இருக்கிறது. ஆகையால் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறும் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.