பெயிண்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்ணாரங்கோடு காலனியில் பெயிண்டரான ராஜேஷ்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் குடும்ப செலவிற்காக பலரிடம் இருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.