கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொங்குட்டிபாளையம் பகுதியில் ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் என்ற மகன் உள்ளார். இவரும் பெருந்தொழுவு சி.எஸ்.ஐ. பகுதியில் வசிக்கும் சைமன்ராஜா என்பவரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி பெருந்தொழுவு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் 2 1/2 கிலோ கஞ்சா இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.