Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுதான் சங்ககால மக்கள் வாழ்ந்த இடம்…. ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள்….!!!!

தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதுப்பேட்டை மாவட்டத்தில் உழுந்தாம்பட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆய்வாளர் இமானுவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடைபெற்ற ஆய்வில் கருப்பு, சிவப்பு நிறத்தில் கீறல் குறியீடுகள், சுடுமன் உருவ பொம்மை களில் தலை கிரீடம், மூக்கு, வாய், கண்கள் போன்ற பகுதிகள் சிதைந்து நிலையில் கிடைத்துள்ளது. இந்த பொம்மைகளை சங்க காலத்து மக்கள் தங்களது எண்ணங்களை ஓவியங்களாக வரைய வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து தகுந்த வெப்பத்தில் சுடும் தொழில்நுட்பத்தை அறிந்து அழகிய சுடுமண் பொம்மைகளை  உருவாக்கினர்.

இதில் காஞ்சிபுரம், ஆண்டிபட்டி, அரிக்கன்மேடு, கீழடி கொடுமணல், காவிரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சுடுமண் உருவ பொம்மைகள் கிடைத்துள்ளது. எனவே இந்த பகுதி சங்ககால மக்கள் வாழ்ந்த இடமாகும்   என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |