தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது, சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மர கிளைகளை வெட்டி, மின் பாதையானது, சரி செய்யப்படுகிறது. இதையடுத்து மின் கம்பங்களில் உள்ள பழுதடைந்த மின் கருவிகள் மாற்றப்படுகிறது.
மேலும் மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், வயர்கள் மாற்றுதல் மற்றும் மின் இணைப்புகளை சரி பார்த்தல் போன்ற முக்கிய பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த பராமரிப்பு பணிகளின் மூலம் மின் பயனாளர்களுக்கு பாதுகாப்பான மின்சாரம் உறுதி செய்யப்படுகிறது.
இதையடுத்து இந்த மின் பராமரிப்பு பணியின் போது, மின் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் மின் பயனர்களின் பாதுகாப்பு, இவற்றை கருத்தில் கொண்டு பணிகள் முடிவடையும் வரை, மின் விநியோகமானது, தடை செய்யப்படுகிறது. மேலும் இந்த மின்தடை குறித்த அறிவிப்பினையும், அந்தந்த பகுதியில் உள்ள செயற்பொறியாளர் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளானது நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆா்கஸ் பீடா், பெருமாள் கோயில் பீடா், ரங்கவிலாஸ் மில் பீடா், எஸ்ஆா்சி பீடா், பாரதி நகா் பீடா், பிஎஸ்ஜி பீடா், ஜெயலட்சுமி மில் பீடா், ராமநாதபுரம் பீடா், பீளமேடு பீடா், ஆா்.கே.புரம் பீடா், புலியகுளம் பீடா், லட்சுமி மில் பீடா், சௌரிபாளையம் பீடா், உடையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், வருகிற 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4-மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.