Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…! இனி எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம்…. தேர்தல் ஆணையம் புது பிளான்…!!!!

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்திய குடிமகனாக இருந்தால் வாக்களிக்க உரிமை இருக்கிறது. ஒருவர் தனது வாக்குரிமையைசெலுத்துவது என்பது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவது ஆகும். தேர்தல் சமயங்களில் ஒரு சில வாக்காளர்கள் சில சூழ்நிலைகளின் காரணமாக சொந்த ஊர்களுக்கு வந்து ஓட்டு போட முடிவதில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அதன்படி எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம் என்ற வாய்ப்பை ஆணையம் ஆராய்ந்து வருகிறது. தேர்தலின்போது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க பலரும் சங்கடபடுகிறார்கள். இது போன்ற பல விஷயங்கள் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேசி வரும் தேர்தல் ஆணையம், தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவருவது பற்றி தீவிரமாக ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |