Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….! இந்த விஷயத்தில் தமிழகம் தான் டாப்…. வெளியான அறிக்கை….!!!!

சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக சென்னை, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து உணவுகளில் செயற்கை நிறம் சேர்ப்பது தவறு. உணவில் தரமில்லா அது மற்றும் கலப்பட பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக புகார் அளிக்க 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொது மக்களுக்கு பாதுகாப்பான உணவை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் தொடர்பான உணவு பாதுகாப்பு குறித்த அறிக்கையை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத், மூன்றாவது இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், சிக்கிம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Categories

Tech |