Categories
மாநில செய்திகள்

பெண் பயணிகளுக்கு குட் நியூஸ்….. ரயில்களில் 200 பெட்டிகளில்….. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

நாட்டில் பெரும்பாலான நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். அதனால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முக்கிய விதிமுறைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். அதைவிட முக்கியமானது பயணிகள் உடைய பாதுகாப்பும். சில சமயங்களில் ரயில்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. இது குறித்த செய்திகளும் நாம் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கோவை சதாப்தி உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை கோட்டத்தில் 200 ரயில் பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 200 பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

Categories

Tech |