படிப்பை பாதியில் விடும் மாணவர்களை மீண்டும் கல்லூரிகளில் சேர்க்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலரான ராஜீவ் குமார் அனுப்பியுள்ள கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையின் படி நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரு படிப்பில் மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சேர்ந்தும், இடையில் நிறுத்தியும் படித்துக்கொள்ளலாம் என்ற சலுகை வழங்கப்படுகிறது.
அதன்படி இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் மாணவர்களை சேர்க்கும் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். சில தவிர்க்க முடியாத காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும் வந்தால் அவர்கள் நிறுத்திய நிலையிலிருந்து மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.