ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திருச்சி மாவட்டத்திலுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு அவர் எந்த துறை அமைச்சர் என்பதே தெரியவில்லை. அவரின் நண்பர் உதயநிதி ஸ்டாலின் சூட்டிங் நிகழ்ச்சி நடக்கும்போது லைட் பாயாக அமைச்சர் சென்று அமர்ந்து இருந்தார். தற்போது புதிய காஸ்ட்யூம் போட்டுள்ளார் அமைச்சர் சேகர் பாபு. மீண்டும் அவர் காவி வேஷ்டி கட்ட தொடங்கியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு மதுரை ஆதீனத்தை தொடர்ந்து மிரட்டி வருகின்றார். பழைய சேகர்பாபு வாக மாறுவதை மோடி அரசு ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்காது. ஆதினத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள். ஆதீனத்தை மிரட்டும் வேலையை உடனே நிறுத்திவிடுங்கள். மதுரையில் துறவிகள் மாநாடு நடந்து முடிந்துள்ளது. ஆதீனங்களை நேரில் வரச்சொல்லி முதல்வரை சந்திக்க வைக்கின்றனர். ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டனர். இது அவர்களின் அழிவுக்கு காரணமாக இருக்கும். தப்பி தவறி கூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள். பிறகு அதன் விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.