Categories
தேசிய செய்திகள்

182 பெண்களின் அந்தரங்க வீடியோ …. மிரட்டி பணம் பறித்த 2 தொழிலதிபர்கள் …. விசாரணையில் பகீர் பின்னணி …!!

மேற்கு வங்காளத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த 3 பேர்  கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்காளத்தில் பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினரான அனீஷ் லோஹரூகாமற்றும்  பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் ஆதித்ய அகர்வால் ஆகிய இருவரும் நண்பகள் ஆவர்.

கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்புடைய வீடியோக்களை எடுப்பதில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

முதலில்  ஒரு பெண்ணுடன் நட்புடன் பழகுவர் பின்னர்  அவர்களுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு உறவை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் அந்தரங்க விஷயங்களை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொள்வார்கள். பின்பு அவர்களுடைய உறவை முறித்துக்கொண்டு அந்த பெண்களை மிரட்டி பணம் பறிப்பது வழக்கமாக கொண்டிருந்தனர்.

இவர்களின் ஒரே நோக்கம் பணம் பறிப்பது ஒன்று மட்டுமே. இதுவரை 182 பெண்களின் அந்தரங்க வீடியோக்களையும் புகைப்படங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வந்துள்ளனர்.

அவர்களிடம் சிக்கிய ஒரு பெண் கடந்த வருடம் நவம்பரில் கொல்கத்தா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில் கைலாஷ் யாதவ் கடந்த 10ந்தேதி கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் , பணம் தரவில்லை எனில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என கைலாஷ் மிரட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் பின்பு லோகரூகா மற்றும் அகர்வால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய லேப்டாப்  பறிமுதல் செய்யபட்டது.

இதனை அடுத்து அந்த 3 பேரும் நகர  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களை வரும்  பிப்ரவரி 6ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Categories

Tech |