இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பப்ஜி விளையாட அனுமதிக்காததால் தாய் ஒருவரை சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பப்ஜி விளையாட தடை போட்ட தனது தாயை 16 வயது சிறுவன் ஒருவன் சுட்டு கொலை செய்துள்ளார்.
இதற்காக தனது தந்தைக்கு சொந்தமான பிஸ்டல் ரக துப்பாக்கியை அந்த சிறுவன் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பஜ்ஜிக்கு தடை விதிக்கப்பட்டதால் சமீபகாலமாக ஓய்ந்திருந்த இதுபோன்ற சம்பவங்கள் தற்போது தடை நீக்கத்திற்கு பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.