சென்னை விமானம் நிலையம்மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து திரிசூலம் போகவும், அங்கிருந்து வெளியே வருவதற்கும் ரூபாய் 80 லட்சத்தில் புதியதாக நகரும் படிக்கட்டுகளானது அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ரூபாய் 1 லட்சம் மதிப்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனிஅறை மற்றும் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் காற்றில் இருந்து குடிநீர் எடுக்கும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை மெட்ரோ ரயில் நிறுவனம் இயக்குனரான ராஜேஷ்சதுர்வேதி திறந்து வைத்தார். அப்போது முதன்மை பொதுமேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், கூடுதல் பொதுமேலாளர் எஸ்.கே.மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் மேலும் 36 நகரும் படிகட்டுகள் பல மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.