Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில்….” ரூ 80 லட்சம் மதிப்பில் நகரும் படிக்கட்டு”….!!!!

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ 80 லட்சம் மதிப்பில் புதிதாக நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில் நிலையம் செல்வதற்கும், அங்கிருந்து வெளியே வருவதற்கு ரூ 80 லட்சம் மதிப்பில் புதிதாக நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது ரூ ஒரு லட்சம் மதிப்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை, ரூ 6 லட்சம் மதிப்பில் காற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி திறந்து வைத்துள்ளார். அதில் முதன்மை பொது மேலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், கூடுதல் பொது மேலாளர் எஸ்.கே.மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர். இதைபோன்று மேலும் 36 நகரும் படிக்கட்டுகள் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |