Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து நீண்ட நாட்களுக்கு பின் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. இந்நிலையில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு உயர்கல்வித்துறை திட்டமிட்டது.

செமஸ்டர் தேர்வுக்குரிய பாடங்களை ஆன்லைன் வாயிலாக நடத்திவிட்டு தேர்வுகளை மட்டும் நேரடி முறையில் நடத்துவது சரியில்லை. இதனால் மீண்டும் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாகவே நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்த உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியது. தேர்வுகள் முடிந்த பின் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல நேரடி வகுப்புகள் தொடங்கியது.

இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 28 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. B.E., B.Tech.,B.Arch., மாணவர்களுக்கு வரும் 18ஆம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்கும் என்றும் M.E., M.Tech., MCA, MBA  படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் செய்முறைத் தேர்வு செப்டம்பர் 5, 6 தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |