பிரபல ஐ.டி.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருந்து ஆபித் அலி திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
பிரபல ஐ.டி நிறுவனமான விப்ரோவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்தவர் ஆபித் அலி நீமுச்வாலா (Abidali Z. Neemuchwala). இந்நிலையில் இவர் திடீரென பதவி விலகியுள்ளார்.
இவர் தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் காரணமாக பதவி விலகுவதாக முடிவெடுத்துள்ளார் என்றும், புதிய நபர் பொறுப்பேற்கும் வரை ஆபித் அலி பதவிகளில் தொடர்வார் என்றும் விப்ரோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஆபித் அலி கடந்த 4 ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பில் இருந்து, விப்ரோவின் சர்வதேச வளர்ச்சிக்கு, சிறப்பான பங்கை அளித்துள்ளார் என்று, அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.