Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்..!!

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதில், பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை வழிநடத்தி சென்றது பெருமை அளிக்கிறது. கேப்டனாக இருந்தது தன்னை மட்டுமின்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியையும் வடிவமைக்க உதவியது என்று குறிப்பிட்டுள்ளார்.

232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவின் மிதாலி ராஜ் 7,805 ரன்கள் எடுத்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களும், 89 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2,364 ரன்களும் எடுத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் மிதாலிராஜ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |