திருவள்ளூரில் பிறந்தநாளன்று பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 6 கல்லூரி மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் சேலை கிராமத்தில் வசித்து வருபவர் கவியரசு. இவர் சென்னை தனியார் பள்ளியில் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ம் தேதியன்று இவரது பிறந்தநாளை கவியரசரின் நண்பர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாட நினைத்து சேலை கிராமத்தின் சாலையில் கூட்டமாக வழிமறைத்து நின்று, அவர் பெயர் பொறிக்கப்பட்ட கேக்கை பட்டா கத்தியால் வெட்டி கொண்டாடிய பின் கத்தியை சுழற்றி ரகளை செய்துள்ளனர்.
மேலும் இதனை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பேக்கிரவுண்ட் சாங் இணைத்து வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த திருவள்ளூர் காவல் நிலைய அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பட்டா கத்தியால் கேக் வெட்டிய மாணவரான கவியரசு மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன் சதீஷ் மனோஜ் விக்னேஷ் சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர்.