திருப்பூரில் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ஐடி ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் தெரிந்தவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களின் சுய விபரக் குறிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். மேலும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பெறுவதற்கு 0421-2999152, 94990-55944 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.